புதுச்சேரி, தர்ம சம்ரக்ஷண சமிதிமற்றும் சபரீஸன் பக்த சமூகம் இணைந்து இன்றும், நாளையும் (டிச 4,5) ஐயப்பன் லக்ஷார்ச் சனை மஹோத்சவத்தை லாஸ் பேட்டை ஈசிஆர் கந்தன் திருமண நிலையத்தில் நடத்துகிறது.
முதல் நாளான இன்று (டிச.4) மாலை 4 மணிக்கு 108 சுமங்கலிகள் செய்யும் லலிதா ஸஹஸ்ரநாம குங்குமார்ச்சனை நடைபெறும். மாலை 6 மணிக்கு சென்னை சபரீஸன் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடைபெறும். அதைத்தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு பிரசாதம் வழங்கப்படும்.
இரண்டாம் நாளான நாளை (டிச.5) காலை 4.00 மணிக்கு கோ பூஜையுடன் தொடங்கி தொடர்ந்து காலை 4.30 லிருந்து அஷ்ட திரவ்ய மஹாகணபதி ஹோமம் மற்றும் துர்கா, நவக்ரஹ, சுதர்ஸன, லக்ஷ்மி நரசிம்ம, தன்வந்த்ரி, நக்ஷத்ர, லக்ஷ்மி, சுப்ரமண்ய ஹோமங்கள் நடைபெறும். இறுதியில் சாஸ்தா ஹோமம் நடைபெற்று மஹா பூர்ணாஹுதி காலை 8.30 க்கு நடைபெறும்.
காலை 8.30 மணிக்கு வேத கோஷங்கள் முழங்க ஐயப்பனுக்கு அஷ்டாபிஷேகமும் அதைத்தொடர்ந்து 100 ஐயப்ப பக்தர்களுடன் லக்ஷார்ச்சனையும் நடைபெறும். அதைத்தொடர்ந்து பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறும்.
முதல்நாள் லலிதா ஸஹஸ்ரநாம குங்குமார்ச்சனை, நாம சங்கீர்த்தனம், மறுநாள் கோ பூஜை, பத்து வித ஹோமங்கள், ஐயப்பனுக்கு அபிஷேகம், லக்ஷார்ச்சனை ஆகிய இவை ஒருசேர முதன்முறையாக புதுச் சேரியில் நடக்கிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago