3 ஆதிதிராவிடர் கல்லூரி விடுதிகளுக்கு ரூ.10.75 கோடி ஒதுக்கீடு :

வேலூர், விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் 3 ஆதிதிராவிடர் நலக் கல்லூரி விடுதிகளில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.10.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் க.மணி வாசன் வெளியிட்ட அரசாணை:

விழுப்புரம் மாவட்டம் திண்டி வனம், சேலம் மாவட்டம் மரவனேரி ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதி மற்றும் வேலூர் ஆதிதிராவிடர் முதுகலை கல்லூரி மாணவியர் விடுதியில் அனைத்து வசதிகளுடன் கூடியபுதிய கட்டிடங்கள் அமைய உள்ளன.

இந்த புதிய கட்டிடங்களை பொதுப் பணித்துறையின் மூல மாக கட்டுவதற்கு ஏதுவாக நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையிடப்படுகிறது. அதன்படி, வேலூர் விடுதிக்கு ரூ.1.60 கோடியும், திண்டிவனத்துக்கு ரூ.3.68 கோடியும், மரவனேரி விடுதிக்கு ரூ.5.47 கோடியும் என மொத்தம் ரூ.10.75 கோடி நிதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

திண்டிவனத்துக்கு ரூ.3.68 கோடி நிதி வழங்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE