புதுச்சேரி, காரைக்காலில் - புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் : இடம் ஒதுக்க ஆளுநருக்கு வைத்திலிங்கம் எம்பி கடிதம்

By செய்திப்பிரிவு

ஆளுநர் தமிழிசைக்கு மக்களவை எம்பி வைத்திலிங்கம் அனுப்பிய கடித விவரம்:

புதுச்சேரி, காரைக்காலில் கேந்திரிய வித்யாலயா (கே.வி)பள்ளியை தொடங்குவதாக மத்தியகல்வித்துறை அமைச்சர் உறுதி தந்துள்ளார். புதுச்சேரி அரசு இடம் தர வேண்டும். மடுகரையில் எஸ்.வி.ராமமூர்த்தி அரசு பள்ளியிலும், காரைக்காலில் கீழவூரிலும் கேவி பள்ளியை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரியில் காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரெயின்போ நகரிலுள்ள இடம்விற்பனை முயற்சியில் வருவாய்த் துறை மீது சந்தேகம் எழுந்துள்ளது. ஆளுநர் இவ்விஷயத்தில் தலை யிட வேண்டும். கோயில் நிலத்தை காப்பாற்ற, உயர்நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை கோயில் நிலத்தை பதிவு செய்யக்கூடாது என பதிவுத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

அனைத்து மாநிலங்களும் மாநில தேர்வாணையத்தை அமைத்துக் கொண்டு மாநில மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருகின்றன.

புதுச்சேரியில் மாநில தேர்வா ணையம் அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும் என்று குறிப்பிட் டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்