வலைத்தளங்களில் அவதூறு: புதுவை அரசின் டெல்லி பிரதிநிதி புகார் :

By செய்திப்பிரிவு

புதுச்சேரி அரசின் டெல்லி பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவ், முதல்வர் ரங்கசாமியிடமும், சைபர் கிரைமிலும் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ் அப்பில் தவறான போலி முகவரிகளைக் கொண்டு தன்னை பற்றி தவறான தகவல்களை பரப்புகின்றனர். குடும்பத்தினரை இழிவாக சித்தரிக்கின்றனர். தனது அரசியல் வாழ்க்கையை மோசமாக சித்தரிக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சைபர் கிரைம் எஸ்பி சுபம்கோஷ் விசாரணையை தொடங்கியபோது, ஆந்திராவிலிருந்து போலி அக்கவுண்ட் தொடங்கி அதன்மூலம் தவறான தகவல் பரப்பப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் அவர் களை பிடிக்க விரைவில் ஆந்திரா செல்ல உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்