சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை ஊராட்சி ஓடப்பட்டியைச் சேர்ந்தவர்கள் பாண்டி, பிச்சப்பன், செல்வம், முருகானந்தம், கலைச்செல்வி. இவர்களது வீடுகள் மீது நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பியது. இதில் 2 வீடுகளில் லேசாக தீப்பற்றியது. இதையடுத்து வீட்டில் இருந்து வெளியே வந்தவர்கள் தீயை அணைத்தனர்.
திருப்பத்தூர் டிஎஸ்பி ஆத்மநாதன், இன்ஸ்பெக்டர் ஆண்டனி செல்லத்துரை தலைமையில் எஸ்.எஸ்.கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago