தேனி மாவட்டம், போடிமெட்டு மலைச்சாலையின் 6-வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் நேற்று காலை 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போடி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் கேரளா மற்றும் தமிழகத்தை இணைக்கும் போடிமெட்டு மலைச்சாலை உள்ளது. 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைந்துள்ள இப்பாதையில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இவற்றை சரிசெய்வதுடன் அவ்வப்போது போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் 6-வது கொண்டை ஊசி வளைவில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. மேலும் வழிநெடுகிலும் சிறிய அளவில் மண்சரிவும் ஏற்பட்டது. இதனால் இடுக்கிக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஜீப்கள் ஆங்காங்கே நிறுத் தப்பட்டன.
நெடுஞ்சாலைத் துறை அதி காரிகள் சாலையில் விழுந்த மண், பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 3 மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து தொடங்கியது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago