வேடசந்தூர் அருகேயுள்ள குடகனாறு அணையை ரூ.28 கோடியில் புதுப்பிக்க திட்டம் உள்ளது என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே அழகாபுரியில் உள்ள குடகனாறு அணையை மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டார். தொடர்ந்து குடகனாறு அணையில் இருந்து கரூர் மாவட்டம், வெள்ளியணை குளத்துக்கு உபரி நீர் கொண்டு செல்வது தொடர்பாக திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், காந்திராஜன் எம்.எல்.ஏ. மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரி களுடன் ஆலோசனை செய்தார்.
வேடசந்தூர் அருகே குடகனாறு அணையை ஆய்வுசெய்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. அணையின் மொத்த நீர்மட்டம் 27 அடியாக உள்ளபோதும், அணையின் பாதுகாப்பு கருதி 24 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 450 கன அடி நீர் வருகிறது. அணையை பார்வை யிட்ட பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு நீர்நிலைகளை மேம்படுத்தும் பணியில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வரு கிறது. குடகனாறு அணையில் முழு கொள்ளளவான 27 அடி தண்ணீர் தேக்க ரூ.28 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட் டுள்ளது.
குடகனாறு அணையின் பழைய ஐந்து ஷட்டர்கள், அணைப்பகுதி ஆகியவற்றை சீரமைக்கவும், வாய்க்கால் பராமரிப்புக்காகவும் முதல்வர், நீர்வளத் துறை அமைச்சரை வலியுறுத்தி நிதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்.
அதன் பிறகு அணையின் முழு கொள்ளளவான 27 அடி தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக் கப்படும். கரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என, மின்வாரிய ஊழியர்கள் நலன் கருதியே அதி காரிகளால் அறிவுறுத்தப்பட்டது. அனைவருக்கும் ஊதியம் வழங் கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago