ஜாவத் புயல் காரணமாக தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்த நிலையில், மத்திய மேற்கு வங்கக் கடலில் புயலாக உருவாகி உள்ளது. இந்தப் புயலுக்கு ஜாவத் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் புயல் டிச.5-ம் தேதி ஒடிசா மாநிலம், புரி கடற்கரை அருகே கரையைக் கடக்கும் என்றும், அப்போது கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயல் அறிவிப்பைத் தொடர்ந்து பாம்பன், தூத்துக்குடி, குளச்சல், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி, சென்னை, எண்ணூர் ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதனால் தமிழக மீனவர்கள் வங்கக் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறையினர் அறிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago