குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் : தடுப்பது குறித்து கிருஷ்ணகிரியில் கலந்தாய்வு :

கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுப்பது குறித்து தலைமை ஆசிரியர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஏடிஎஸ்பி ராஜு தலைமை வகித்தார். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சரவணன் பங்கேற்று, கரோனா காலத்திற்குப் பிறகு குழந்தைகள் இடைநிற்றல் அதிகரித்துள்ளதை தடுப்பது, பள்ளிக்கு அருகில் பெட்டிக்கடைகளில் போதைப் பொருட்கள் விற்பதை கண்காணித்து போலீஸாருக்கு தகவல் அளிப்பது, குழந்தைத் திருமணம், பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வை ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும், மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் எடுத்து கூறி தடுப்பது குறித்தும் பேசினார். இந்நிகழ்ச்சியில், டிஎஸ்பி விஜயராகவன், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமித்ரா, கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, மத்தூர் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE