நாகப்பட்டினம்: ஜனநாயக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் நாகை ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்தை நல வாரிய நிதிக்கு வழங்க வேண்டும். குறைந்தபட்ச கூலியாக ஒரு நாளைக்கு ரூ.1,000 வழங்க வேண்டும். வீடு, கல்வி, மருத்துவ வசதிகளை இலவசமாக வழங்க வேண்டும். ஒருநாளைக்கு 8 மணி நேர வேலையும், கூடுதல் நேர வேலைக்கு 2 மடங்கு கூலியும் வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களை எஸ்.சி, எஸ்.டி என பிரித்து சாதி சான்று கேட்பதை கைவிட வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வீரசெல்வன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார்.ஒன்றியச் செயலாளர்கள் அருளானந்தம், சிதம்பரம், பால்ராஜ், ஆபிரகாம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago