கும்பகோணம் சக்கரபாணி கோயில் குளத்தின் சுவர் ரூ.5 லட்சம் செலவில் புதுப்பிப்பு :

By செய்திப்பிரிவு

கும்பகோணம்: கும்பகோணத்தில் காவிரி ஆற்றின் தென்கரையில் சக்கரபாணி கோயில் உள்ளது. சிறப்பு மிக்க இக்கோயில் வளாகத்தில் உள்ள குளத்தின் சுற்றுச்சுவர் மற்றும் சுற்றுப்பாதை அமைக்கும் பணிகள் உபயதாரர் மூலம் ரூ.5 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணிகள் நிறைவு பெற்று நேற்று திருக்குளக்கரையில் சிறப்பு ஹோமங்கள், தீபதூப ஆராதனைகள் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் நகர்மன்ற முன்னாள் தலைவர் க.ப.தமிழழகன், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் ரவிச்சந்திரன், பெரும்பாண்டி ஊராட்சித் தலைவர் ஆர்.கே.பாஸ்கர், உபயதாரர்கள் மணிரவிச்சந்திரன், குருமுரளி, சீனிவாசன், சுதர்சன பக்தர்கள் சபா குழுவினர் வி.சத்தியநாராயணன், ராமுகிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தி.மல்லிகா, தக்கார் ம.ராஜகுரு, கோயில் பட்டாச்சாரியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்