கோவிலூர் நெல் சேமிப்புக் கிடங்கு வளாகத்தில் - சேறும், சகதியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை :

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகேயுள்ள கோவிலூரில், தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கு உள்ளது. இங்கு 22 ஏக்கர் பரப்பளவில் 12 சேமிப்புக் கிடங்குகள் அமைந்துள்ளன.

திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள 45 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பெறப்படும் நெல் மூட்டைகள், இந்த கோவிலூர் சேமிப்புக் கிடங்கில் பாதுகாக்கப்பட்டு, பின்னர் அரைவை ஆலைகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

இந்நிலையில், இந்த சேமிப்பு கிடங்கு வளாகத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் மழையால் சேறும், சகதியுமாகி, மிக மோசமான நிலையில் உள்ளன.

இதனால், கொள்முதல் நிலையங்களில் இருந்து கொண்டுவரப்படும் நெல் மூட்டைகளை ஏற்றிவரும் லாரிகளும், இங்கிருந்து அரைவை ஆலைக்கு நெல் மூட்டைகளை எடுத்துச் செல்லும் லாரிகளும் சேறும் சகதியுமான சாலையில் நெல் மூட்டைகளுடன் அடிக்கடி சிக்கிக் கொள்கின்றன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் அங்கேயே தேக்கமடைந்து, மழையில் நனைந்து, நெல்மணிகள் முளைவிட்டு வீணாகி வருகின்றன.

எனவே, நெல் மணிகள் வீணாவதை தடுக்க இங்குள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்