காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

காரைக்கால் மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகள் தட்டுப்பாட்டைபோக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் ப.மதியழகன் தலைமையில் கலியமூர்த்தி, ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள், நலவழித் துறை துணை இயக்குநர் டாக்டர் சிவராஜ்குமாரிடம் நேற்று அளித்த மனுவில் தெரிவித்துள்ளது:

காரைக்கால் மாவட்டத்தில் தொடர் கனமழையால் கொசுக்கள் அதிகரித்து டெங்கு, மலேரியா நோய்கள் பரவி வருகின்றன. இதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசு பொது மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவும் மருந்துகள் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தொற்று குறைந்திருந்தாலும், தற்போது புதிதாக ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, இதுகுறித்து பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்