திருவாரூர்: திருவாரூர் மாவட்ட அமமுக செயல்வீரர்கள் கூட்டம் மன்னார்குடியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், அமமுக துணை பொதுச் செயலாளர் என்.ரங்கசாமி பேசியபோது, “திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக உறுதியாக போட்டியிடும். எனவே, வீடு வீடாக கட்சி நிர்வாகிகள் சென்று, ஆதரவு திரட்ட வேண்டும்” என்றார்.
கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ கு.சீனிவாசன், மாவட்ட துணைச் செயலாளர் சரவணச்செல்வன், ஒன்றியச் செயலாளர் அசோகன், நகரச் செயலாளர் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago