பெண் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 6 பேர் கைது :

By செய்திப்பிரிவு

கோவில்பட்டியில் பெண் போக்குவரத்து காவலரை அவதூறாகப் பேசி, பணி செய்யவிடாமல் தடுத்ததாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கோவில்பட்டியில் போக்குவரத்து பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வருபவர் ஜான்சிராணி (50). இவர், நேற்று முன்தினம் கோவில்பட்டி பிரதான சாலையில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக, ஒரு பெண்ணின் சடலத்தை இறுதிச் சடங்குக்காக நடராஜபுரத்தில் உள்ள மயானத்துக்கு சிலர் கொண்டு சென்றனர்.

அவர்களில் சிலர் போக்குவரத்துக்கு இடையூறாக நடனமாடியவாறு செல்லவே ஜான்சிராணி கண்டித்துள்ளார். இதையடுத்து அவரை அவதூறாகப் பேசி, கீழே தள்ளி, பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர். இதுகுறித்து ஜான்சி ராணி அளித்த புகாரின் பேரில், தலைமை காவலரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக லெனின் நகரைச் சேர்ந்த மா.ராசு (30), அண்ணா நகரைச் சேர்ந்த பெ.மாடசாமி (56), அதே பகுதியைச் சேர்ந்த ஜெ.சுந்தரமூர்த்தி (27), மா.மதன்ராஜ் (28), அ.சந்தனகுமார் (26) மற்றும் மா.சுரேஷ்குமார் (29) ஆகிய 6 பேர் மீதும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்