கோவில்பட்டி அருகே டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்ததில் ஓட்டுநர் உட்பட இருவர் காயமடைந்தனர்.
கர்நாடகா மாநிலத்தில் இருந்து திருநெல்வேலிக்கு எத்தனால் ஏற்றிய டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை கர்நாடகா மாநிலம், விஜயபுரா மாவட்டம் திகில் ஆப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பீமாசங்கர் மகன் சதீஷ் (24) என்பவர் ஓட்டி வந்தார். திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டியை அடுத்த இடைசெவல் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது டேங்கர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. லாரி ஓட்டுநர் சதீஷ் மற்றும் மாற்று ஓட்டுநர் ரா.சித்து (23) ஆகிய இருவரும் காயமடைந்தனர். தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்துக்குச் சென்ற நாலாட்டின்புத்தூர் போலீஸார் காயமடைந்த இருவரையும்மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து தீ விபத்து ஏற்படாமல் இருக்கும் பொருட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டது. இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago