தூத்துக்குடி: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காணப்படக்கூடிய ஒரு அரிய வகை உயிரினம் கடல் பன்றி. இது ஆழ்கடலில் வசிக்க கூடியது. சிறிய வகை மீன்களை சாப்பிடக்கூடியது.
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் இறந்த நிலையில் நேற்று கடல் பன்றி ஒன்று கரை ஒதுங்கியது. அது 235 சென்டி மீட்டர் நீளம் கொண்டதாகவும், 150 கிலோ எடையுடனும் காணப்பட்டது. நடுத்தரமான இந்த ஆண் கடல் பன்றி ஏதேனும் கப்பலில் அடிபட்டோ, சமீபத்தில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு, ஏதேனும் பாறைகளில் மோதியோ உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அது இறந்து ஒரு வாரம் ஆகியிருக்கலாம் எனத் தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்த மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, அந்த கடல் பன்றியை கைப்பற்றி அங்கேயே பரிசோதனை செய்தனர். பின்னர் கடற்கரையோரத்தில் குழி தோண்டி அமிலம் உள்ளிட்டவைகளை ஊற்றி அது புதைக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago