கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு : வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை இங்கு அருவியாக கொட்டுகிறது.

நேற்று முன்தினம் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கரோனா கட்டுப்பாடுகளால் கடந்த மே முதலே அருவியில் குளிக்கத் தடையால் சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை. இருப்பினும், வனத்துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதிக நீர்வரத்தால் மலைப் பகுதிகளில் ஆங்காங்கே ஏராளமான நீர் தேக்கங்கள் உருவாகி உள்ளன. அருவியில் ஏற்பட்ட வெள்ளம் பாம்பாற்றின் மூலம் வராகநதியில் கலந்து வைகை அணைக்குச் செல்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE