தி.மலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி குறித்து புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங் களுக்கு அருகில் குடியிருப்பவர்கள், சட்ட விரோதமாக இயங்கும் தொழிற்சாலைகள் குறித்த புகாரை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தி.மலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருட்கள் உற்பத்தி குறித்த புகார்களை 80560-42201 என்ற வாட்ஸ்-அப் எண் அல்லது deetvm@tnpcb.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். புகார் அளிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும். சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்களுக்கு அவர்களின் பங்களிப்பாக பாராட்டும் வெகுமதியும் அளிக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago