கரூர் தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் மனைவி செந்தில்ராணி பெயரில், க.பரமத்தி பகுதியில் உள்ள 4 வீட்டுமனைகளை வரன்முறை செய்ய க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.குமரவேல் ரூ.1.25 லட்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் தர விரும்பாத சக்திவேல் இதுகுறித்து கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் அளித்தார். அவர்கள் அளித்த யோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரம் ரொக்கப் பணத்தை க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குமரவேலிடம் சக்திவேல் நேற்று கொடுத்தார். அதை குமரவேல் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த இன் ஸ்பெக்டர் சால்வன்துரை தலைமையிலான கரூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு போலீஸார் குமரவேலை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடை பெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago