திருச்சி ஜங்ஷன் மேம்பாலத்துக்காக ராணுவ நிலத்தில் - கட்டுமான பணிக்கு ரூ.2.93 கோடி ஒதுக்கீடு : 6 மாதத்துக்குள் முடிக்க நெடுஞ்சாலைத்துறை திட்டம்

By செய்திப்பிரிவு

திருச்சி ஜங்ஷன் மேம்பாலத்துக்காக மன்னார்புரம் ராணுவ நிலத்தில் மீதமுள்ள கட்டுமான பணிகளை மேற்கொள்ள ரூ.2.93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6 மாதத் துக்குள் பணிகளை முடிக்க நெடுஞ் சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.

திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக மத்திய பேருந்து நிலையம், திண்டுக்கல் சாலை, ரயில்வே ஜங்ஷன் சாலை, கிராப்பட்டி வழியாக மதுரை சாலை, மன்னார்புரம் வழியாக சென்னை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையிலான பாலம் கட்டும் பணிகள் கடந்த 2014-ல் தொடங்கியது. முதல்கட்டமாக மத்திய பேருந்து நிலைய சாலை, திண்டுக்கல் சாலை, கிராப்பட்டி சாலை, ஜங்ஷன் சாலை ஆகியவை இணைக்கப்பட்டு, அதன் வழியாக போக்குவரத்துக்கு அனு மதிக்கப்பட்டது.

எனினும் மன்னார்புரம் ராணுவ நிலத்தை பெறுவதில் ஏற்பட்டுள்ள இழுபறி காரணமாக சென்னை வழித்தடம் மட்டும் இணைக்கப்படாமல், மேம்பாலப் பணிகள் பாதியிலேயே நின்றது. மாநில அரசு மற்றும் எம்.பி.க்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து முயற்சித்தனர். இதன்காரணமாக, கையகப்படுத்தும் நிலத்துக்கு ஈடாக தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை யினர் ரூ.8.45 கோடி தொகையோ அல்லது அதற்கு இணையான கட்டமைப்பு வசதியையோ ராணுவத் துக்கு செய்து தர வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ராணுவ நிலத்தில் மேம்பால கட்டுமான பணிகளை மேற்கொள்ள, ராணுவ அமைச்சகம் முன் அனுமதி வழங்கியது.

இதையடுத்து அங்கு மீதமுள்ள கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இப்பணிக ளுக்காக தற்போது ரூ.2.93 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் மீதமுள்ள பாலம் மற்றும் சர்வீஸ் சாலை பணிகளை மேற்கொள்வதற்கான கட்டுமான நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்காக மாநில அரசின் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளது. டிசம்பர் மாதத்துக்குள் அந்நிறுவனத்தைத் தேர்வு செய்து, ஜனவரியில் தொடங்கி 6 மாத காலத்துக்குள் மீதமுள்ள பணிகளை முடிக்க மாநில நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்