கரூர் மாவட்டம் தோகைமலை அருகேயுள்ள கள்ளையை சேர்ந்தவர் துரை. இவர் கடந்த 2010-ம் ஆண்டு நிலப்பிரச்சினை தொடர்பாக புகார் அளிக்க தோகைமலை காவல் நிலையம் சென்றுள் ளார். அப்போது அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப் பதிவு செய்ய லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் அளிக்க விரும் பாத துரை, இதுகுறித்து திருச்சி ஊழல் தடுப்பு கண்காணிப்புப்பிரிவில் புகார் அளித்தார். அவர்கள் ஆலோச னைப்படி சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல், அங்கிருந்த மக்கள் நலப்பணியாளர் பிச்சைமுத்து ஆகியோரிடம் துரை ரூ.7,000 பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவினர், லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல், மக்கள் நலப்பணியாளர் பிச்சைமுத்து ஆகியோரை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் கடந்த 2013-ல் உயிரிழந்தார். இந்நிலையில், இவ்வழக்கில் கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ராஜ லிங்கம் நேற்று அளித்த தீர்ப்பில், சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் உயிரிழந்ததால், அவரை இவ்வழக்கில் இருந்து விடுவித்தார். முன்னாள் மக்கள் நலப்பணி யாளர் பிச்சைமுத்துவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை யும், ரூ.20,000 அபராதமும், அபராத தொகையை கட்டத்த வறினால் மேலும் ஓராண்டு தண்டனையும் விதித்து உத் தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago