திருப்பூர் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் மு.பெ.சாமிநாதன் (கிழக்கு), க.செல்வராஜ் (மத்தியம்), இல.பத்மநாபன் (வடக்கு), ஜெயராமகிருஷ்ணன் (தெற்கு) ஆகியோர் தெரிவித்துள்ளதாவது: திருப்பூர் மாவட்டத்தில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், நிறைவு பெற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக திருப்பூருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.22) பகல் 1 மணிக்கு வரவுள்ளார்.
அவருக்கு, கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அவிநாசி - திருப்பூர் சாலை சந்திப்பு மேம்பாலம் அருகே திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, வார்டு, கிளை செயலாளர்கள், பொறுப்பாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago