ரயில் பயணிகளுக்கு - மீண்டும் ஐஆர்சிடிசி சார்பில் உணவு விநியோகம் :

By செய்திப்பிரிவு

கரோனா பரவலைத் தடுக்கும்வகையில், விரைவு ரயில்களில் ஐஆர்சிடிசி மூலம் உணவுகள் விநியோகம் செய்வது நிறுத்தப்பட்டது. தற்போது, கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், பல்வேறு தளர்வுகளை ரயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது.

இந்நிலையில், ரயில் பயணிகளுக்கு ஐஆர்சிடிசி மூலம் மீண்டும் உணவு விநியோகம் செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஐஆர்சிடிசி வெளியிட்ட உத்தரவில், "கரோனா கட்டுப்பாடு காரணமாக, சமைக்கப்பட்ட உணவைவழங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது நிலைமை சீராகி வருவதால், உணவு விநியோக சேவையை மீண்டும் தொடங்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.எனவே, ரயில் பயணிகளுக்கு ஐஆர்சிடிசி மூலம் உணவு விநியோகம் தொடங்க வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவைத் தொடர்ந்துரயில்களில் உணவு விநியோகிக்கும் பணியைத் தொடங்க ஐஆர்சிடிசி நடவடிக்கை மேற்கொண்டுஉள்ளது. எப்போதிலிருந்து உணவு விநியோகிக்கப்படும் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்