அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் மற்றும் ஆண்டிமடத்தில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை மைய வளாகத்தில், பெரம்பலூர் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் தலா ரூ.75 லட்சம் மதிப்பில் 500 டன் கொள்ளளவு கொண்ட 2 தானி யங்கள் விற்பனை நிலைய கட்டிடங்களை (பரிவர்த்தனைக் கூடங்கள்) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சென்னையிலிருந்து நேற்று திறந்து வைத்தார்.
இதையடுத்து, மேற்கண்ட 2 கட்டிடங்களையும் ஜெயங்கொண் டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் நேற்று பார்வையிட்டார். நிகழ்ச் சியில், பெரம்பலூர் வேளாண் விற்பனைக் குழு செயலாளர் ஜெயக்குமார், பெரம்பலூர், அரி யலூர் மாவட்ட வேளாண் துணை இயக்குநர் சிங்காரம், அரியலூர் மாவட்ட வேளாண் அலுவலர் கார்த்திக், ஜெயங்கொண்டம் வேளாண் விற்பனைக்குழு கண் காணிப்பாளர் ராஜேஷ்குமார் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, இறவாங்குடி ஊராட்சியில் ரூ.9.97 லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மாதாபுரத்தில் ரூ.9.87 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணருடன் அமைக் கப்பட்ட புதிய மோட்டார் அறை, முருகன்கோட்டையில் ரூ.9.82 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப் பட்ட ஆழ்குழாய் கிணறுடன் சிமென்ட் தண்ணீர் தொட்டி ஆகிய வற்றை எம்எல்ஏ க.சொ.க.கண் ணன் நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் லதா கண்ணன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago