அரியலூர் மாவட்டத்தில் ரூ.1,19,11,000 மதிப்பில் பல்வேறு கட்டிடங்களை மாநில பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, எம்எல்ஏ கு.சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு, அரியலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இலுப்பையூர் கிராமத்தில், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் வேங்கன் ஏரியில் ரூ.21.48 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய மதகை திறந்து வைத்தார். மேலும், ராயம்புரம், ரெட்டிபாளையம் கிராமங்களில் கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை சார்பில் தலா ரூ.9 லட்சம் மதிப்பிலும், தேளூர், வெளிப்பிரிங்கியம் கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.18.16 லட்சம் மதிப்பிலும் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடங்கள், ஒட்டக்கோவில் கிராமத்தில் கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அரசு துணை சுகாதார நிலையம், வெளிப்பிரிங்கியம் கிராமத்தில் சிறப்பு தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சம் மதிப்பிலும், மண்ணுழி கிராமத்தில் மறுசீரமைக்கப்பட்ட ஒருங்கி ணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.15.47 லட்சம் மதிப்பிலும் கட்டப்பட்ட 2 பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் ஆகியவற்றையும் அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்து பார்வையிட்டாா்.
நிகழ்ச்சிகளில், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், செயற்பொறியாளர் ராஜராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அகிலா, அன்புசெல்வன் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago