பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் பலத்த மழையால் இனாம் அகரம் கிராமத்தில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. ஆண்டு சராசரியைவிட நிகழாண்டு அதிக அளவில் மழை பெய்துள்ளது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்நிலையில் நேற்று முன் தினம் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வேப்பந் தட்டை வட்டம் வி.களத்தூரை அடுத்த இனாம் அகரம் கிராமத் தில் வெள்ளாறு மற்றும் உப்போடையில் கரைபுரண்டு ஓடும் மழை நீர் அங்குள்ள நெல் வயல்களில் புகுந்தது. இதில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்து வயலில் குவித்து வைக்கப் பட்டுள்ள சின்ன வெங்காயமும் மழைநீரில் நனைந்து முளைக்க தொடங்கிவிட்டது.
மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்கள் குறித்து மாவட்டம் முழுவதும் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago