அமைச்சர், ஆட்சியர் உத்தரவை மீறி கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து வாகன உரிமை யாளர்கள், ஓட்டுநர்கள் கப்பலூர் டோல்கேட்டை நேற்று முற்றுகை யிட்டனர்.
திருமங்கலத்தை அடுத்த கப்ப லூரில் டோல்கேட் செயல்படுகிறது. திருமங்கலம் நகரில் இருந்து 3 கி.மீ. தொலைவுக்குள் இந்த டோல்கேட் விதிகளை மீறி செயல்படுவதை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடக் கின்றன. திருமங்கலத்தைச் சேர்ந் தவர்களுக்கு மட்டும் டோல் கட் டணம் வசூலிப்பதில்லை.
நான்குவழிச் சாலை வசதி இல் லாத ராஜபாளையம் சாலையை பயன்படுத்துவோருக்கும் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத் தும் டோல்கேட் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.
இது தொடர்பாக அடிக்கடி மறியல், வாக்குவாதம், மோதல் நடந்தன. இந்நிலையில் கட்டண வசூல் குறித்து ஆட்சியர் அலு வலகத்தில் அக்.20-ல் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருமங்கலம் தொகுதி மக்களுக்கு கட்டண வசூலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் அறிவித்தனர். மேலும் சட்ட விதிகளை மீறி செயல்படும் டோல்கேட்டை அகற்ற நீதிமன்றம் மூலம் நட வடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 20 நாட்களாக திருமங்கலம் தொகு தியைச் சேர்ந்தவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனால், திருமங்கலம் நகராட் சியைத் தவிர்த்து மற்ற பகுதி வாகனங்களுக்கு கட்டணம் கேட்டு டோல்கேட் நிர்வாகம் கடந்த சில நாட்களாக மீண்டும் பிரச்சினையை கிளப்பியது.
இது நாளுக்கு நாள் அதிக ரிக்கவே, டி.கல்லுப்பட்டி, பேரை யூர் பகுதிகளைச் சேர்ந்த வாகன உரிமையாளர்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள் கோபமடைந்தனர்.
இவர்கள் நூறுக்கும் மேற்பட்ட வாகனங்களுடன் நேற்று காலை கப்பலூர் டோல்கேட்டை முற்றுகை யிட்டனர். திருமங்கலத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினரும் பங்கேற்றனர்.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் 2 கி.மீ. வரிசையில் நின்றது. நிலைமை மோசமடைந்ததால் கூடுதல் எஸ்.பி. மணி, திருமங்கலம் ஆர்டிஓ அனிதா உள்ளிட்ட அலுவலர்கள் போராட்டக் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து திருமங்கலம் நகர் திமுக முன்னாள் செயலாளர் தர் கூறியதாவது:
கட்டணம் விலக்கு அளிக்க முடியாது என டோல்கேட் நிர்வாகம் தெரிவித்துவிட்டது.
ஆட்சியர், அமைச்சர் உத்தரவு குறித்து கேட்டதற்கு எழுத்துப் பூர்வமாக எந்த உத்தரவும் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. 30 ஆண்டு ஏலம் எடுத்து வசூலிப்பதால் எதுவும் செய்ய முடியாது எனத் தெரிவித்தனர்.
ஆர்டிஓ பேச்சுவார்த்தையில், ஒரு வாரத்தில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தார். இதை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. அதுவரை கல்லுப்பட்டி, பேரையூர் பகுதி வாகனங்களுக்கு கட்டணம் செலுத்தமாட்டோம்.
கோரிக்கையை நிறைவேறா விட்டால் அடுத்த கட்ட போராட் டத்தை பெரியதாக நடத்துவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அறிவித்துள்ளனர்.
கப்பலூர் டோல்கேட்டை அகற்றுவதாக முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே உறுதியளித்துள்ளார். இதை உடனே நிறைவேற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டத்தால் மதுரை-திருமங்கலம் நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago