கண்மாய்க்கு சென்ற தண்ணீரை அடைத்ததால் - இரு கிராமத்தினரிடையே பிரச்சினை :

மானாமதுரை அருகே கண்மாய்க்கு சென்ற தண்ணீரை மணல் மூட்டைகளை கொண்டு அடைத் ததால் இரு கிராமத்தினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

மானாமதுரை அருகே மிளக னூர் கண்மாய் நிரம்பியதும், அதில் இருந்து வெளியேறும் உபரிநீர் சின்னகண்ணனூர் கண்மாய் மற்றும் விருதுநகர் மாவட்டம் கொட்டகாட்சியேந்தல் கண்மாய்களுக்கு செல்லும். இரு கண்மாய்களுக்கும் கஞ்சிமடை தரைப்பாலம் அருகே கால்வாய் பிரிகிறது.

தற்போது வைகை ஆற்று நீர் மூலம் மிளகனூர் கண்மாய் நிரம்பி, சின்னகண்ணனூருக்கு உபரிநீர் செல்கிறது. இந்நிலையில் நேற்று கொட்டகாட்சியேந்தல் கிராமத்தினர் கஞ்சிமடை தரைப் பாலத்தில் சின்னகண்ணனூர் கண்மாய்க்கு செல்லும் கால்வா யை மணல் மூட்டைகளை வைத்து மறைத்தனர்.

இதனால் சின்னகண்ணனூர், கொட்டகாட்சியேந்தல் கிராமத்தினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கோட் டாட்சியர் முத்துக்கழுவன் தலைமையிலான அதிகாரிகள் கிராம மக்களை சமரசப்படுத்தினர்.

இதையடுத்து மணல் மூட்டை கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து இரு கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப் பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE