சிவகங்கை அருகே பில்லூர் கண்மாய் நிரம்பிய நிலையில் மடை வழியாக தண்ணீர் வெளியேறிவிடாதபடி கிராம மக்கள் மணல் மூடைகள் வைத்து அடைத்து வைத்திருந்தனர்.
இதனால் கண்மாய் நீர், தனியார் ஒருவரது நிலத்துக்குள் புகுந்தது. அவரது புகாரில் அதிகாரிகள் கண்மாய் நீரை திறந்துவிட்டனர். அதிகாரிகளின் இச்செயலை கண்டித்து கிராம மக்கள் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்ட எஸ்பி செந்தில்நாதன், வருவாய் கோட் டாட்சியர் முத்துக்கழுவன் உள் ளிட்டோர் கிராம மக்களை சமரசப் படுத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.
இந்த மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago