கோவை: கோவையில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவ காரணமாக இருந்ததாக தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உத்தரவின்பேரில், களப்பணியாளர்கள் மூலம் வீடுகளில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருப்போர் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இந்நிலையில், 33-வது வார்டுக்குட்பட்ட காளப்பட்டி வழியாம்பாளையம் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் டெங்கு களப்பணியாளர்கள் நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வில், குடியிருப்பு வளாகத்தில் அதிகப்படியான லார்வா கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, டெங்கு காய்ச்சல் பரவ காரணமாக இருந்ததாக தொடர்புடைய அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago