தொழிற்பேட்டை திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் : விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம்

மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி, தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேட்டுப்பாளையம் வட்டத்துக்குட்பட்ட பள்ளேபாளையம், இலுப்ப நத்தம் மற்றும் அன்னூர் வட்டத்துக்குட்பட்ட பொகளூர், வடக்கலூர், குப்பனூர், அக்கரை செங்கப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் 3,800 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு மேட்டுப்பாளையத்தில் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் மாநிலச் செயலர் வேணுகோபால் தலைமை வகித்தார். இதில் விவசாயிகள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

‘விவசாயத்தை அழித்து பவானிஆற்றையும் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும் தொழிற்பேட்டை எங்கள் பகுதிக்கு வேண்டாம். இத்திட்டத்தை கைவிடும் வரை, தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவது’ என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE