தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக விண்ணப்பிக்க அழைப்பு :

தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்தியதொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக விண்ணப்பிக்க 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை. தொழிற்பழகுநர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் அரசு உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில், 3 ஆண்டு முன் அனுபவம் இருக்க வேண்டும். ஆகஸ்ட் 2019-ல், எஸ்சிவிடி, திட்டத்தின் கீழ் சேர்ந்த பயிற்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வராக ஒரு தொழிற்பிரிவில் தேர்வெழுத விரும்பும் விண்ணப்பதாரர் தொழிற்பயிற்சிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் முதனிலைத் தேர்வுகள் கருத்தியல் பாடத்தில் டிச.14-ம் தேதி மற்றும் செய்முறை தேர்வு டிச.,15 ஆகிய தேதிகளில் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இத்துறையால் நடத்தப்படும். கருத்தியல் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ள முடியும். தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், விண்ணப்பபடிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு, நெறிமுறைகள் மற்றும் பற விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு கட்டணம் செலுத்தி சலான், கல்விச் சான்றிதழ் நகல் மற்றும் விண்ணப்பங்கள் வரும் 22-ம் தேதிக்குள், துணை இயக்குநர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஓசூர் என்கிற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE