மாநில எல்லை மலைக்கிராமங்களில் - குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையக உறுப்பினர் ஆய்வு :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆந்திர, கர்நாடக மாநில எல்லைகளிலுள்ள மலைக்கிராமங்களில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையக உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த மஞ்சுகொண்டப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சுகொண்டப்பள்ளி, கெஸ்தூர் மற்றும் பெல்பட்டி கிராமங்களில் உள்ள பள்ளிகள், சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராம்ராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

பள்ளிகள், சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணியாளர்கள் மற்றும் குழந்தைகளின் வருகை பதிவேடுகள், பள்ளி மேலாண்மை கூட்ட பதிவேடு, பொருட்கள் இருப்பு பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்ததோடு அங்குஉள்ள கழிப்பறை, வளாக சுத்தம், தண்ணீர் வசதி உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டார். பள்ளி இடைநிற்றல், குழந்தை திருமணத்தை தடுத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த ஆசிரியர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களிடம் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

ஆய்வின்போது ஏடிஎஸ்பி, ராஜு, மாவட்ட குழந்தை நலக் குழு தலைவர் கலைவாணி, மாவட்ட குழந்தை உரிமைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், மாவட்ட கல்வி அலுவலர் அன்பழகன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரளா, உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE