மின்வாரிய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு - கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை :

விழுப்புரம் மாவட்டத்தில் பணிகாலத்தில் இறந்த மின்வாரியபணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

பணி காலத்தில் இறந்த பணியாளர்களின் 4 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை, விழுப்புரம்மின்பகிர்மான கழக மேற்பார்வைபொறியாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்பொன்முடி நேற்று வழங்கினார். அப்போது அவர் கூறியது:

பல்வேறு நெருக்கடியான பேரிடர் காலங்களில் புயல், மழை போன்ற இயற்கை சீற்றங்களை சந்திக்கின்ற தருணங் களில் மின்வாரியத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பொதுமக்களுக்காக நேரம் காலம் பார்க்காமல் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இக்கட்டான காலகட்டங்களில் பணிபுரிந்துவரும் இவர்களின் பணி மிகவும் போற்றுதலுக்குரிய ஒன்றாகும்.

மாவட்டத்தில் தொடர் கன மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வரு கின்றன. மேலும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்கள் என்றார்.

இந்நிகழ்வில் ஆட்சியர்மோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் புக ழேந்தி, லட்சுமணன், விழுப்புரம் மண்டல தலைமை பொறியாளர் பெர்ட்ரான்ட் ரஸ்ஸல், மேற்பார்வை பொறியாளர் குமாரசாமி, செயற்பொறியாளர் மதனகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போல, மின்பகிர்மான கழகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணிக்காலத்தில் இறந்ததால் அவர்களின் வாரிசுதாரர்கள் 3 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையை திண்டிவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் நேற்று வழங்கினார்.

மின்வாரிய பணியாளர்கள் பொதுமக்களுக்காக நேரம் காலம் பார்க்காமல் பணிபுரிந்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE