இன்றும் நாளையும் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் :

By செய்திப்பிரிவு

வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி தலைமை தேர்தல் ஆணையர் சுர்பிர் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தலைமை தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, கடந்த 1-ம் தேதி முதல் வரும் 30-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வரும் 2022 ஜனவரி 1-ஐத் தகுதி பெறும் நாளாகக் கொண்டு, 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர்களாக, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக புதுச்சேரியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (இன்றும், நாளையும்) புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து, வரும் நவ. 20, 21 (சனி, ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

பொதுமக்கள் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி, தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களை மேற்கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் மேற்குறிப்பிட்ட நாட்களில் இந்த வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் தலைமை தேர்தல் ஆணைய வலியுறுத்தலின்படி அந்தந்தப் பகுதிகளில் நடைபெறுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்