அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் : ஆய்வுக்கு சென்ற கிருஷ்ணகிரி எம்பி-யிடம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கிருஷ்ணகிரி எம்பியிடம் நாடார் கொட்டாய் கிராம மக்கள் மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாடார் கொட்டாய், சோக்காடி உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து எம்பி டாக்டர் செல்லக்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நாடார் கொட்டாய் கிராமத்தில் போதிய சாலை வசதி மற்றும் குடிநீர் பற்றாக்குறை பிரச்சினை கடந்த பல ஆண்டுகளாக உள்ளது. இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என எம்பி-யிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

இதேபோல, கிருஷ்ணகிரி ராஜாஜி நகர் பகுதியிலும் ஆய்வு செய்தார். அப்போது, அப்பகுதி மக்கள் மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் புகுந்து விடுவதால் வீடுகளில் குடியிருக்க முடியாத நிலை ஏற்படுகிறது. குடியிருப்புப் பகுதிகளில் போதிய அளவு கழிவுநீர் கால்வாய் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மனுவை பெற்றுக் கொண்டஎம்பி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்