சிக்கண்ணா அரசு கல்லூரி இடத்தில் விளையாட்டு மையம் : திருப்பூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் எதிர்பார்ப்பு

By செய்திப்பிரிவு

திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி இடத்தில் ஒருங்கிணைந்த விளையாட்டு மையம் அமைக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் சிலர் கூறியதாவது:

தமிழகத்தில் வளர்ச்சியில் பின்தங்கிய பல்வேறு மாவட்டங்களிலும், தேசிய தரத்தில் விளையாட்டு மைதானங்கள் உள்ளன. தொழில் வளர்ச்சியில் முன்னிலையில் உள்ள திருப்பூரில், நவீன விளையாட்டு மைதான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. நீண்டபோராட்டத்துக்குப் பிறகு சிக்கண்ணா அரசுகல்லூரி மைதான வளாகத்தில்உருவாக்கப்பட்ட உள்விளையாட்டரங்கிலும் போதிய வசதிகள், கட்டமைப்புகள் இல்லை. இச்சூழலில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு அமைப்புகள், ஆர்வலர்களின் கோரிக்கைக்கு ஏற்பவும்,விளையாட்டின் வளர்ச்சி கருதியும் தற்போது சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த விளையாட்டு மையம்அமைக்கும் பணியைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.

தற்போது உள்விளையாட்டு அரங்கு உள்ள இடத்தின் பின்புறம் புதர்கள் நிறைந்து, பயன்பாடுகள் எதுவுமின்றி காணப்படும் 12 ஏக்கர் நிலப்பரப்பில் கால்பந்து, தடகளம், டென்னிஸ், நீச்சல்,வாலிபால், கூடைப்பந்து என சென்னையில்கூட இல்லாத வகையில், சர்வதேச தரத்தில்ஒருங்கிணைந்த விளையாட்டு மையத்தைஅமைக்கும் பணியை ரூ.18 கோடி செலவில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தொடங்கியுள்ளது.

இது அனைத்து விளையாட்டு வீரர்கள், அமைப்புகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாகும். சிக்கண்ணா கல்லூரி முன்னாள் மாணவர்கள் என்ற பெயரில், சிலர் இதனைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்கால மாணவர் சேர்க்கையைக் கருதி இத்திட்டத்தை நிறுத்த வேண்டும் என எவ்வித வலுவும்இல்லாத காரணத்தைக் கூறி, மக்கள்பிரதிநிதிகள் மூலமாக தடைகளை ஏற்படுத்த முயல்கின்றனர். இது முற்றிலும் கண்டனத்துக்குரியது என்றனர்.

அவிநாசி கால்பந்து கழகத்தின்செயலாளர் காளிதாஸ் கூறும்போது,‘‘ஒருங்கிணைந்த விளையாட்டு மையம் போன்ற கட்டமைப்புகள் இருந்தால்மட்டுமே, திருப்பூரில் சர்வதேச தரத்தில்விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்