கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்தில் உள்ள இன்னாடு கிராம ஊராட் சித் தலைவர் பதவிக்கான தேர்த லில் முதலில் ஜெயக்கொடி என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
பின்னர் திடீரென விஜயா என்பவர் வெற்றி பெற்றதாக மாற்றி அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஜெயக்கொடி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், 675 வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரியின் கையெழுத்துடன் அளிக்கப்பட்ட ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த ஆவணத்தை ஆய்வு செய்த நீதிபதிகள், இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முழுமையாக விசாரணை நடத்திஅந்த ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்றது யார் என்பது குறித்து வரும் நவ.17 அன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த தேர்தலில் வெற்றி பெற்றதாக யாரும் உரிமை கோரக்கூடாது என உத்தரவிட்டு, இதுதொடர்பாக விஜயா தரப்பிலும் பதிலளிக்க உத்தரவிட்டுள் ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago