டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை - சம்பா பயிர்க் காப்பீடு தேதியை நீட்டிக்க வேண்டுகோள் :

By ந.முருகவேல்

டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் பயிர்க் காப்பீட்டுத் தொகை செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயற்கை சீற்றங்களால் விவசாயிக ளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புக ளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்க, வருவாயை நிலைப்படுத்த மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப் பதை ஊக்குவிக்க பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டம் 2016 முதல் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு 2021-ம் ஆண்டு முதல் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகளை கட்டாயமாக பதிவுசெய்து வந்த நிலையில், தற்போது அவர்களின் விருப்பத்தின் பெயரில் பதிவு செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, மாவட்ட வாரியான பயிர் வாரியான சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகை நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு 4.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். எனவே தமிழ்நாடு அரசு சம்பா சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு செய்யலாம் என அறிவித்துள்ளது. அதன்படி ஒரு ஏக்கருக்கு ரூ.488.25 பிரீமியம் தொகையை இம்மாதம் 15-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பேசிய வீராணம் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ரங்கநாயகி“தற்போது வடகிழக்குப் பருவமழை அதிகரித்து தொடர் மழையாக இருப்பதால் விவசாயிகள் விளைநிலங்களில் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்றுவது, வரப்புகளை சரிசெய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். மேலும் சிட்டா பெறுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. கடந்த முறை செலுத்திய பயிர் காப்பீட்டுக்கான இழப்புத் தொகையும் வந்து சேரவில்லை. எனவே பயிர் காப்பீட்டு பிரீமியம் செலுத்தும் தொகையை இம்மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்