குடும்ப தகராறை விசாரிக்க சென்றபோது - விருதுநகர் அருகே ஏட்டுக்கு அரிவாள் வெட்டு : � கூலித் தொழிலாளி கைது

By செய்திப்பிரிவு

விருதுநகர் ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் முருகன் (50). வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மன்னார்கோட்டையில் பால்பாண்டி என்பவரது குடும்பத்தினருக்கும் கூலித் தொழிலாளியான அவரது அண்ணன் ராசு மகன் குமார் என்பவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது.

இதுகுறித்து விசாரிப்பதற்காக ஏட்டு முருகன் அங்கு சென்றார். அக்கம்பக் கத்தினரிடம் விசாரணை நடத்திவிட்டு, குமாரிடமும் ஏட்டு முருகன் விசாரணை நடத்தினார். இரவு நேரத்தில் யாரும் பிரச்சினை செய்ய வேண்டாம், காலையில் காவல் நிலையம் வாருங்கள் விசாரிக்கிறோம் எனக் கூறினார். அப்போது ஆத்திரமடைந்த குமார், தனது சித்தப்பாவுக்கு ஆதரவாக முருகன் பேசுவதாக குற்றம் சாட்டி, அவரை அரிவாளால் வெட்டினார். அதை தடுக்க முயன்ற முருகனுக்கு இடது கை மணிக்கட்டில் பலத்த வெட்டு விழுந்தது. அங்கிருந்து குமார் தப்பிச் சென்றார். படுகாயமடைந்த ஏட்டு முருகன், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.

வச்சக்காரப் பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்