கொடைக்கானல் மலைப்பகுதி பெரியூர் மலைகிராமம் அருகே பள்ளத்துக்கால்வாய் பகுதியில் வாழைகளை யானைகள் சேதப்படுத்தியுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களான பேத்துப்பாறை, அண்ணாநகர், அஞ்சுரான்மந்தை, அஞ்சுவீடு பகுதிகளில் தொடர்ந்து யானைகள் நடமாட்டம் உள்ளது. இரவு நேரத்தில் ஊருக்குள் யானைகள் நடமாட்டத்தால் மலை கிராம மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக பெரியூர் கிராமம் பள்ளத்துக்கால்வாய் பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளது. இவை அப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். யானைகள் நடமாட்டத்தால் தோட்ட வேலைக்கு செல்ல தொழிலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இரவு நேரத்தில் தோட்டப் பகுதியில் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago