ஆழியாறு அணையிலிருந்து : 11 மதகுகள் வழியாக உபரிநீர் திறப்பு :

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை நிரம்பியதால் அணையின் பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது.

பொள்ளாச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆழியாறு அணை நீர் பிடிப்பு பகுதியான மேல்ஆழியாறு அணை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து விநாடிக்கு 2400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவான 120 அடியில் 119.20 அடியை எட்டியது.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை 5.30 மணிக்கு அணையில் உள்ள 11 மதகுகளும் திறக்கப்பட்டு அதன் வழியாக விநாடிக்கு 2400 கனஅடி உபரி நீர், மின் உற்பத்தி நிலையம் வழியாக ஆற்றுப்படுகையில் 380 கன அடி தண்ணீர் என மொத்தம் 2780 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆழியாறு ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தண்ணீர் திறப்பை செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் லீலா, உதவி பொறியாளர் கார்த்திக் கோகுல் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கண்காணித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE