கோவை உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணி நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கிய சாலை என்பதால், இச்சாலையில் எப்போதும் வாகனப் போக்குவரத்து இருக்கும். மேம்பாலப் பணி நடப்பதாலும், அதிக வாகனப் போக்குவரத்து காரணமாகவும் இந்த சாலை பழுதடைந்து காணப்படுகிறது. இந்நிலையில், ஆத்துப்பாலம் சந்திப்பு அருகே குண்டும் குழியுமாக, சேதமடைந்து காணப்படும் இந்த சாலையை, அங்கு போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 4 பேர் ஒன்றிணைந்து, நேற்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேடாக காணப்பட்ட பகுதிகளை மண்வெட்டியை பயன்படுத்தி வெட்டி அகற்றினர். குழிகளாக காணப்பட்ட பகுதியில் கற்கள், மண் கொட்டி சமன்படுத்தினர். காவல்துறையினரின் இந்த பணியை அங்கிருந்த ஒருவர், வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டார். காவல்துறையினரின் இந்த செயல்பாட்டுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago