தருமபுரி ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் பழங்கால செப்பு நாணயம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
தருமபுரியில், ‘தருமபுரி ஜல்லிக்கட்டு பேரவை’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவர் ஆறுமுகம் நேற்று தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து பழங்கால செப்பு நாணயம் ஒன்றை அளித்தார். அண்மையில், தருமபுரி ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் காளைகள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு ஜல்லிக்கட்டு-2022 விதிமுறைகளை விளக்குவது தொடர்பான தீர்மானக் கூட்டம் நடத்தப்பட்டது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டையில் உள்ள கோயிலின் பின்புறம் நடந்த இக்கூட்டத்தின்போது, இங்குள்ள நிலத்தில் பழங்கால செப்பு நாணயம் ஒன்று கிடைத்தது.
‘1835-ம் ஆண்டைச் சார்ந்த இந்த நாணயத்துடன் தொடர்புடைய வரலாற்று தகவல்களை ஆய்வுகள் மூலம் கண்டறிந்து இன்றைய தலைமுறையினர் அவற்றை அறிந்து கொள்ளும் வகையில் ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நாணயத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தோம்’ என்று ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ஆறுமுகம் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago