தொடர் கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 41 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவரும் நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று சராசரியாக 29 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்கராபுரம் வட்டத்தில் 20 செ.மீ மழையும், திருக்கோவிலூர் வட்டத்தில் 18 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 305 ஏரிகளில் 41 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன.
அதில் சங்கராபுரம் வட்டத்தில் உள்ள 14 ஏரிகளில் 12 ஏரிகளும், திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள 36 ஏரிகளில் 16 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
திருவநாவலூரில் 11 ஏரிகளும், கள்ளக்குறிச்சி மற்றும் ரிஷிவந்தியம் பகுதியில் தலா 1 ஏரியும் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
மொத்தமுள்ள 305 ஏரிகளில் 41 ஏரிகள் முழுக் கொள்ளளவையும், 53 ஏரிகள் 75 முதல் 95 சதவிகித கொள்ளளவையும், 80 ஏரிகள் 50 முதல் 75 சதவிகித கொள்ளளவுடன் இருப்பதாகவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago