மதுரை வண்டியூர் கண்மாய் நீர் வைகை ஆற்றுக்கு வீணாகச் சென்று கொண்டிருக்கிறது. கண் மாயை ஆழப்படுத்த தவறியதால் கண்மாய்க்கு வரும் தண்ணீர் தேங்கவில்லை.
மதுரை வண்டியூர் கண்மாய், நிலத்தடி நீர்மட்டம் உயர முக்கிய நீராதாரமாக உள்ளது. கடந்த காலத்தில் வண்டியூர் கண்மாயை ஆழப்படுத்தி தண்ணீர் சேகரிக் கப்பட்டதால் மதுரையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படவில்லை.
மாநகராட்சி குழாய் மூலம் வழங்கும் குடிநீரை குடிக்கவும், வீடுகளில் போடப்பட்ட ஆழ் துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீரை வீட்டு உபயோகத்துக்கும் மக்கள் பயன் படுத்தினர்.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக வண்டியூர் கண்மாய் பராமரிப்பில் பொதுப்பணித்துறை கவனம் செலுத்தவில்லை.
அதனால், கரையோரங்களில் தனியார் ஆக்கிரமிப்பு அதிகமாகி நீர்பிடிப்பு பகுதி குறைந்தது.
கண்மாயையும் தூர்வாராததால் தண்ணீர் தேங்கும் கண்மாய் பரப்பு மேடான பகுதியாகி விட்டது. அதனால், வண்டியூர் கண்மாய்க்கு வரும் மழை தண்ணீர் தேங்காமல் அப்படியே அருகில் உள்ள வைகை ஆற்றில் வீணாகக் கலந்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு தென் மேற்கு பருவமழைக் காலத்திலும் இதுபோல அதிக அளவு மழைநீர் வண்டியூர் கண்மாய்க்கு வந் தது. ஆனால், கண்மாயை ஆழப் படுத்தாததால் அப்போதும், இதேபோல கண்மாய்க்கு வந்த அதிகமான தண்ணீர் கண்மாயில் தேங்காமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago