கால்வாயை அடைத்து நெடுஞ்சாலை அமைத்ததால் - சிங்கம்புணரியில் 40 வீடுகள் நீரில் மூழ்கின :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், சிங்கம் புணரியில் ஊருணியில் இருந்து உபரிநீர் வெளியேறும் கால்வாயை அடைத்து நெடுஞ்சாலை அமைக் கப்பட்டதால் தண்ணீர் ஊருக்குள் புகுந்து 40 வீடுகள் நீரில் மூழ்கின.

சிங்கம்புணரியில் திண்டுக்கல் - காரைக்குடி தேசிய நெடுஞ் சாலையை ஒட்டி அரனத்தங்குண்டு ஊருணி உள்ளது. இந்த ஊருணி நிரம்பியதும், உபரி நீர் வெளியேறும் வகையில் சாலையின் குறுக்கே கால்வாய் அமைக்கப்பட்டிருந்தது. இக்கால்வாய் தற்போது நடந்து வரும் சாலை விரிவாக்கப் பணி யின்போது மூடப்பட்டு, சாலை அமைக்கப்பட்டது.

தற்போது தொடர் மழையால் அரனத்தங்குண்டு ஊருணி நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. ஆனால் கால்வாய் இல்லாததால் அரனத்தங்குண்டு குடியிருப்பில் தண்ணீர் புகுந்தது. இதனால் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கின.

இதையடுத்து தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஊருணியி லிருந்து உபரிநீர் வெளியேற கால்வாய் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்