சம்பா பயிர்க் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிக்க கோரிக்கை :

கும்பகோணம்: உழவர் பேரியக்க மாநிலத் தலைவர் கோ.ஆலயமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

டெல்டா மாவட்டங்களில் தற்போது 5 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்று வருகிறது. சம்பா சாகுபடிக்கான பயிர்க் காப்பீடு செய்ய நவ.15-ம் தேதி இறுதிநாள் என காப்பீடு நிறுவனங்கள் அறிவித்துள்ளதாக வேளாண்மைத் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் அறுவடையே இன்னும் முடியவில்லை. அதேபோல, தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டி, பூதலூர் போன்ற பகுதிகளில் காலதாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டதால், அப்பகுதியில் சாகுபடி தாமதமாக தொடங்கியுள்ளது. எனவே, தமிழக அரசு பயிர்க் காப்பீடு செய்ய டிச.15 வரை கால நீட்டிப்பு வழங்கி விவசாயிகளின் நலன்காக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE