காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. காரைக்காலில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் 47.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதையடுத்து, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் வீரசெல்வம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆட்சியர் அர்ஜூன் சர்மா நேற்று பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில், நகராட்சி சந்தைத் திடல் அருகே உள்ள வாய்க்கால், பெரியபேட் பகுதியிலிருந்து வரக்கூடிய வடிகால் வாய்க்கால், பேட்டை பகுதியில் உள்ள அரசலாறு உள்ளிட்டவற்றில் ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணியை ஆட்சியர் பார்வையிட்டார். மேலும், மழைநீர் தேங்கியிருந்த காரைக்கால் சேமியான்குளம் குடியிருப்புப் பகுதி, குழாய் பதிப்புக்காக தோண்டப்பட்டு சேதமடைந்திருந்த திருநள்ளாறு குமாரக்குடி பகுதி சாலை ஆகியவற்றையும் பார்வையிட்டார். திருநள்ளாறில் சாலை பாதிப்பு குறித்து ஆட்சியரிடம் எம்எல்ஏ பி.ஆர்.சிவா எடுத்துரைத்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago